ஈ.பி.டி.பி யின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் விலகும் குலசிங்கம் திலீபன்!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் வகித்த அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறுவதாக அந்த கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகலுக்குக் கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ பொறுப்பில்லை இது எனது தனிப்பட்ட முடிவு என குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.