ஈ அளவிலான ட்ரோன்களை கண்டுபிடித்துள்ளது சீனா

சீனாவில் உள்ள இராணுவ ஆராய்ச்சி நிறுவனம், ஈ போன்ற வடிவத்தைக் கொண்ட ஒரு உளவு ட்ரோனை வெளியிட்டுள்ளது.

இந்த சிறிய ஆளில்லா ஈ அளவிலான ட்ரோன் மெல்லிய கால்கள் மற்றும் இரண்டு இறக்கைகள் கொண்டது.

சீனாவிலுள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஈ வடிவிலான ட்ரோன்கள், அந்நாட்டின் இரகசிய இராணுவ நடவடிக்கைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அத்துடன், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பேரிடர் கண்காணிப்பு போன்ற விடயங்களுக்கு இது பயன்படுத்தப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.