இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க தாமதிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியிருந்தது.

எனினும், இஸ்ரேல் கோரும் உயர் சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதை தாமதப்படுத்துவது அல்லது இடைநிறுத்துவது அமெரிக்க உயர் அதிகாரிகளின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக நடைபாதையை திறப்பதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த முடிவின் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்