இலவச ஆயுர் வேத வைத்திய முகாம்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகர் ஜூம் ஆ பள்ளிவாயலில் இலவச ஆயுர் வேத வைத்திய முகாம் ஒன்று இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்று (02) இடம்பெற்ற குறித்த வைத்திய முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள்,வயோதிபர்கள்,முதியோர்கள் என பயன் பெற்றனர்.

இதில் சிறுநீர் பரிசோதனை,இரத்த சோகை, உயர் குருதி அமுக்க பரிசோதனை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வும் ஆலோசனையும் மருந்துகளும் வழங்கப்பட்டிருந்தன.

இதன்போது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, கப்பல் துறை ஆயுர் வேத தளவைத்தியசாலை வைத்தியர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.