இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் நேற்று ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார்.

1970 ஆம் ஆண்டு பிறந்த Jean-François Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன், Jean-François Pactet அமெரிக்காவிற்கான வொஷிங்டனில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திலும் (2012-2016) பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோவுக்கான பிரான்ஸ் நிரந்தர பிரதிநிதித்துவத்திலும் நியமிக்கப்பட்டார். அவர் பிரான்சின் வெளியுறவு அமைச்சகத்தின் பிரதி செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார்.

சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்