இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பதவி விலகினார் பாரத் அருள்சாமி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சகல பொறுப்புக்களிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகியுள்ளார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை, இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கமைய, பாரத் அருள்சாமி, கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்கு அப்பால் தம்மால் செயல்பட இயலாது என்பதால், தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.