இலங்கை சமூக சக்தி அறிமுக விழா
-பதுளை நிருபர்-
இலங்கை சமூக சக்தி அறிமுக விழா இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் ஊவா மாகாண ஒருங்கிணைப்பு செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் மகனுமான ஷேன் பிரதிஸ் தலைமையில் பதுளை தபால் கந்தோர் பிரதான மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் கலந்து கொண்டதுடன், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், இந்நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன
இதன்போது 360 பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், 16 விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்