-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நேற்று இறந்த நிலையில் முதலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
முதலை இறந்தது தொடர்பில் மக்கள் மத்தியில் மிகவும் அச்சநிலை தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
இதுவரைகாலமும் இக்குளத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். .