
இறக்காமம், பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடல்
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர், இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சி அமைவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடலொன்று புணானை ஐசிஎஸ்டி வளாகத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.
அக்கட்சியின் இறக்காமம், வரிப்பத்தான்சேனை, பொத்துவில் மத்திய குழுக்களுடனான இக் கலந்துரையாடலில் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ .எம். ஹிஸ்புல்லாஹ். கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ் உதுமாலெப்பை, பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ .எம் .மன்சூர், கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ .சீ.சமால்தீன், உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.