இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கக்கூடாது ஏன் தெரியுமா
இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கக்கூடாது ஏன் தெரியுமா
இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கக்கூடாது ஏன் தெரியுமா
🔺ஜீன்ஸ் நவீன உலகில் மிகவும் பிரபலமான ஃபேஷன் ஆடைகளில் ஒன்றாகும். ஆண், பெண், சிறியவர் அல்லது பெரியவர் என அனைத்து வயதினருக்கும் இது வசதியானது. அதனால் அனைவருமே ஜீன்ஸ் அணிய விரும்புகின்றனர். குறிப்பாக பெண்கள் ஜீன்ஸ் ஆடைகளை இன்றைய காலத்தில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலர் இரவில் ஜீன்ஸிலேயே தூங்கிவிடுகினனர்.. இப்படி செய்வதால் பல பிரச்சனைகள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள் எச்சரிக்கின்ரனர்..
🔺உங்களுக்கும் ஜீன்ஸ் அணிந்து தூங்கும் பழக்கம் இருந்தால் இன்றே அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம இல்லையெனில், இந்த கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியென்றால் அந்த பிரச்சனைகள் என்ன என்பதையும், இரவில் படுக்கும் முன் ஜீன்ஸ் அணிவதால் என்ன நடக்கும் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
🔷உடல் வெப்பநிலை பொதுவாக தூங்கிய சில மணிநேரங்களில் படிப்படியாக குறைகிறது. இருப்பினும், ஜீன்ஸ் அணிந்து உறங்கும்போது, காற்று சுழற்சி குறைவாகவும், உடல் வெப்பநிலை அதிகமாகவும், தூக்கத்தை சீர்குலைக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
🔷இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து உறங்குவதால் சிலருக்கு வயிற்று வலி, அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே முடிந்தவரை ஜீன்ஸ் அணிந்து உறங்குவதை தவிர்த்து விட்டு, தளர்வான காட்டன் உடையில் உறங்குவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
🔷ஜீன்ஸ் டெனிம் துணியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த துணி நம் உடலில் இருந்து வியர்வையை உறிஞ்சாது. எனவே, ஜீன்ஸ் அணியும் போது, வியர்வை நமது பிறப்புறுப்பு, தொடை மற்றும் கால்களில் தங்குகிறது. இரவில் இதை அணிவதால் பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது இனப்பெருக்க ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
🔷ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடையில் உறங்குவதால், கருப்பை, வயிறு மற்றும் பிறப்புறுப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் தடைபடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தும் மாதவிடாயின் போது வலியை அதிகரிக்கும்
🔷இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து உறங்குவதால் உடலுக்கு சரியான காற்று சுழற்சி கிடைக்காது. இதனால் தோலில் அரிப்பு, சொறி, சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை குறைந்த நேரம் ஜீன்ஸ் அணிவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். அதிக வியர்வை உள்ளவர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கக்கூடாது ஏன் தெரியுமா
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்