இன்றைய ராசிபலன்

மேஷம்

கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். பொறுமையுடன் அனைத்தையும் அணுகுங்கள்.

ரிஷபம்

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரும். இதனால் வேலை பளு அதிகரித்துக் காணப்படும். மொத்தத்தில், நிதானம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். பணிச் சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.

சிம்மம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல்நலம் சிலருக்கு சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை போராடி சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். இது ஒரு சாதாரண நாளே.

துலாம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் சிலருக்கு ஆதாயம் உண்டு. வாகன வசதி உயரும். வியாபாரத்தில் பற்று வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு

உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.

மீனம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.