இன்றைய ராசி பலன்

மேஷம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்பு கூடும் நாள்.

சிம்மம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி

சோர்வு, களைப்பு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

வாழ்க்கைத் துணைவழியில் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

தனுசு

சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்

தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சி பலிதமாகும் நாள்.

கும்பம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். பணிச் சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.