இன்றைய ராசி பலன்
மேஷம்
அஎதையும் தாங்கும் மனோ பலனும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். நன்மை நடக்கும் நாள்.
கடகம்
அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழையகடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அதிர்ஷ்டமான நாள்.
கன்னி
நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
துலாம்
கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். பொறுமையுடன் அனைத்தையும் அணுகுங்கள்.
விருச்சிகம்
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
தனுசு
குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
மகரம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.
கும்பம்
திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். தாயாரின் உடல் நிலை படிப்படியாக சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களு டைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதா யம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.