இன்றைய இராசிபலன்

மேஷம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அமோகமான நாள்.

கடகம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

கன்னி

வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். அலைச்சல் சற்று அதிகரித்துக் காணப்படும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்த படியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.

துலாம்

கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டு இருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

தனுசு

உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும்
நாள்.

மகரம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்பு கூடும் நாள்.

கும்பம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டு கிடைக்கும் நாள்.