இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து : 67 மாணவர்கள் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சிடோர்ஜோவில் இஸ்லாமிய பாடசாலையின் கட்டுமானப் பணியின்போது, கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
அதில், 170க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.
கடந்த, ஒன்பது நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில், 104 பேர் மீட்கப்பட்ட நிலையில், 67 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.