அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவரின் அனுபவம்
அஹ்மதாபாத் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வாஸ்குமார் ரமேஷ் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்திய ஊடகமொன்றிற்குத் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குறித்த நபர் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த சந்திப்பின் பின்னர் விஸ்வாஸ்குமார் ரமேஷ், விபத்து குறித்த தமது அனுபவத்தை இந்திய ஊடகத்திற்குப் பகிர்ந்து கொண்டார்.
“நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்று தெரியவில்லை.நான் இறக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருப்பதைக் கண்டேன். விடுதியில் விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை, நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி.எனக்கு அருகில் இருந்த கதவு உடைந்ததால் நான் வெளியில் வந்தேன்.விமானம் விழுந்த பகுதியின் எதிர்ப்பக்கத்தில் சுவர் இருந்ததால் யாராலும் தப்ப முடியவில்லை.நான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தது.நான் எப்படி தப்பினேன் என எனக்கே தெரியவில்லை” என்று விஸ்வாஸ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.