அரச வருமானம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் ஊடாக 2,223 பில்லியன் ரூபாய் வருமானமும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாக 2,105 பில்லியன் ரூபாயும், மதுவரித் திணைக்களத்தின் ஊடாக 213 பில்லியன் ரூபாயும், ஏனையவை ஊடாக 70 பில்லியன் ரூபாயும் வருமானமாக பெறப்பட்டுள்ளது.
2025 இன் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 410.5 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 355 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதியின் ஊடாக 54.6 பில்லியன் ரூபாய் வருமானமாக பெறப்பட்டிருந்தது.
இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்த அரச வருமானம் 35.5% இனால் அதிகரித்து 4,945.8 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இதேநேரம் 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தத் தொகை 3,650.9 பில்லியன் ரூபாயாகவும் உள்ளது.
