அமெரிக்காவில் நில அதிர்வு

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, பிலடெல்பியாவில் உள்ள சிட்டி ஹால் உள்ளிட்ட கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நில அதிர்வையடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்