அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 24 பேர் காயம்
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்