அமெரிக்காவின் தாக்குதலுக்கு சவூதி அரேபியா கவலை
ஈரானில் நடைபெற்று வரும் பதற்றமான சூழ்நிலைகள், குறிப்பாக அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதற்கு சவுதி அரேபியா கடும் கவலை தெரிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானின் இறையாண்மையை மீறும் எந்தவொரு செயலையும் கண்டிப்பதாக சவுதி அரசு மீண்டும் வலியுறுத்தியது.
ஏற்கனவே இது தொடர்பாக கடந்த ஜூன் 13, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்தாக்குதலை சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கண்டித்து, உடனடி பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது.
வெளியுறவு அமைச்சகம், பிராந்திய ஸ்திரத்தன்மையை பராமரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது,
மோதல்கள் மேலும் தீவிரமடையாமல் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், சர்வதேச சமூகம் தீவிரமான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்க அமைதியான தீர்வு அவசியம் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.
ஈரானின் அணு வசதிகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் மோதல் பரவுவதற்கான அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
Beta feature