அனாமிகா கலை பண்பாட்டு மையம் நடாத்திய கலை இலக்கிய கூடலும் நினைவுப் பேருரையும்
மட்டக்களப்பு , சேனையூர் மற்றும் இலண்டன் அனாமிகா கலை பண்பாட்டு மையம் நடாத்திய அனாமிகா – 2024 கலை இலக்கிய கூடலும் நினைவுப் பேருரையும் இன்று வியாழக்கிழமை கல்லடி சண்சையின் கிரான்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் சாந்தி கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தியும்,சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடியும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பேராசிரியர் கி.பார்த்திபராஜாவால் “தெருக்கூத்து ஒரு அறிமுகம்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்.
இதன்போது பேராசிரியர் கி.பார்த்திபராஜாவின் “சிகண்டி” தெருக்கூத்து அனாமிகா 2024 நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கு நூலின் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலைமாமணி கமலா ஞானதாஸ் மற்றும் கலாபூஷணம் தேனூரான் ஆகியோர் தலைக்கோள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்