அநுராதபுரத்தில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

அநுராதபுரம், மிகிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலுவெவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மிகிந்தலை, பாலுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்