இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு

மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினதும் நாளாந்த செயல்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

பணிபகிஷ்கரிப்பால் மூதூரிலுள்ள கிராம உத்தியோகத்தர் காரியாலயங்கள் மூடப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்