கைதொலைபேசியை கடையிலிருந்து திருடிய பெண்ணும் தாயும் கைது

மாத்தளை பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் தாயும் மகளும் நேற்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யும் கடையொன்றிற்குள் சென்று திருட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நீண்ட காலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க