யாழில் வீசிய காற்று: முழுமையாக சேதமடைந்த கோவில் கூரை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த கடும் மழையுடனான வானிலை காரணமாக கோவில் ஒன்றின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இதனை தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

இதேவேளை உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்