இலங்கை கிரிக்கட் பேரவை உத்தியோகபூர்வ உடையுடன் வியாஸ்காந்த்

இலங்கையில் நடத்தப்படும் முன்னணி கிரிக்கெட் போட்டியான எல்பிஎல் தொடரில் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாகிய வி. வியாஸ்காந்த் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ளமையானது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் திங்கட்கிழமை இலங்கை கிரிக்கட் பேரவை உலகக்கிண்ண ரி20 போட்டிக்கான உத்தியோகபூர்வ உடையுடன் இருக்கும் வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கட் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற வியாஸ்காந்தின் புகைப்படத்தையும் கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்