
திருகோணமலையில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்
-திருகோணமலை நிருபர்-
முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதித்துறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை கண்டித்து சட்டத்தரணிகள் , “சட்ட ஆட்சியை நிறுத்து”, “நீதித்துறையில் தலையிடாதே” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



