ஊர்காவற்துறையில் விழிப்புணர்வு கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்-

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் புதன் கிழமை ஊறுகாவற்துறை கண்ணகி அம்மன் கோவில் துறைமுகப் பகுதியில் விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பாரம்பரிய மீனவர்களின் கடற்றொழிலை பாதிக்கும் அட்டைப் பண்ணையை உடன் நிறுத்து, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே, மீனவர்களை வாழவிடு” என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரின் ஒருங்கிணைப்பில், பொது அமைப்புகள், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்