
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெஷாக் நிகழ்வு
-யாழ் நிருபர்-
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் விசேட பூஜை மற்றும் தான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதாகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள் கலந்து கொண்டு விசேட வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.
மேலும் நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,இந்து மத குரு, சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
