வாகன விபத்து: ஒருவர் பலி

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மாதம்பே – இரட்டைக்குளம் பகுதியில் அதிவேகமாக வந்த லொறி ஒன்று எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டதாகவும் மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்