வைத்தியசாலை விடுதியில் நேர்ந்த சோகம் : தாயும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழப்பு

-வவுனியா நிருபர் கீர்த்தீபன்-

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது  வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் இன்று திங்கட்கிழமை விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்ற நிலையில் தவறி வீழ்ந்து அவ்விடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அவர் மீட்கப்பட்டு, அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திர சிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்