வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மூவரில், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23)
நாவலப்பிட்டியில் இருந்து யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கற்ற முதலாம் வருட மாணவி, நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்
சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32),
தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான போது எதிரே வந்த மற்றொரு சொகுசு பேருந்து விபத்தை தடுக்க வீதியை விட்டு விலகி சென்று நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான அதி சொகுசு பேருந்துகளை மீட்கும் பணியை இராணுவத்தினர் இணைந்து பாரந்தூக்கியுடன் துணையுடன் அகற்றினர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வவுனியா விபத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
வவுனியாவில் பாரிய விபத்து : மூவர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்