ஊவா மாகாண போர் மாவீரகள் வைபவம்

ஊவா மாகாண சபையின் ஏற்பாட்டில் ஊவா மாகாண போர் மாவீரகள் வைபவம் இன்று வியாழக்கிழமை காலை பதுளை போர்வீரர் நினைவிடத்தில் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள், போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொலிஸ் மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சர்வமத நிகழ்வுகளின் பின்னர், ஊவா மாகாண ஆளுநர், முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்