கனடாவை வீழ்த்தியது அமெரிக்கா
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் கனடாவை வீழ்த்தி 7 விக்கெட்டுக்களால் அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ்யில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அமெரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் நவ்நீத் தலிவால் 61 ஓட்டங்களையும், நிக்கோலஸ் கிர்டன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் 195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களை பெற்றதுடன், ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்