மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸார் இருவர் படுகாயம்

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் குறித்த இருவரும் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுர பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை பிரதேச போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் மரதன்கடவல பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதே இந்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை மாத்தளையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்