போதைப்பொருளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்-

மஹியங்கனை பகுதியில் இரண்டு கிலோ 350 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரு  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மஹியங்கனை பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மஹியங்கனை பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அமைய , சந்தேகத்துகாகு இடமான பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளைப் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை நீதிவான் நீதிமன்றின் ஆஜர் படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்