Tsunami, Psychology போன்றவற்றில் முதல் எழுத்தான “T”, “P” ஏன்?

“Tsunami”

ஜப்பானிய மூலச்சொல்லிருந்து ஆங்கிலத்திற்கு வந்த சொல். “tsu” என்றால் “துறைமுகம்”; “nami” என்றால் “அலை.” ஆங்கிலத்துக்குரிய சொற்கள் “ts” எனும் உயிர்மெய்யெழுத்துக் கூட்டில் தொடங்காது. அதற்காக “t” எழுத்தை வெட்டி “Sunami” என்ற ஆங்கிலச் சொல்லாக உருவாக்க முடியாது. ஏனென்றால் அந்த சொல்லினை வேராய்வு செய்தால் “su” என்ற மூலச்சொல்  ஜப்பானிய மொழியில் “துறைமுகம்” என்ற பொருளைத் தராது. குழப்பம் தான் ஏற்படும்.

“Tsu”, “na”, “mi” எனும் மூன்று அசைகளைக் (syllables) கொண்ட சொல்லில் இரண்டாம் அசையில் அழுத்தம் கொடுப்பதால் மற்ற அசைகள் வேகமாக ஒலிக்கப்படுவதால், T ஒலிக்கவில்லை போல் தோன்றும். ஆனால் அது தவறு.

Tsunami சொல்லின் உச்சரிப்பு: /tsuːˈnɑː.mi/. ஏறக்குறைய அதன் தமிழ் ஒலிபெயர்ப்பு: “ட்ஸூ.’னா.மி”. “T” (=”ட்”) எழுத்தை அழுத்தி ஒலிக்கக் கூடாது. மிக நுட்பமாக ஆனால் விரைவாக ஒலிக்க வேண்டும்.

“Psychology”

கிரேக்க மொழியிலிருந்து (psyche & logos) வந்த சொற்களைக் கொண்டு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட சொல். மூலத்திலிருக்கும் psyche எனும் சொல்லுக்கு soul என்று பொருள்.

ஆங்கிலத்துக்குரிய சொற்கள் “ps” எனும் உயிர்மெய்யெழுத்துக் கூட்டில் தொடங்காது. அதற்காக “p” எழுத்தை வெட்டி “Sychology” என்ற ஆங்கிலச் சொல்லாக உருவாக்க முடியாது. அப்படி எழுத்தை வெட்டிவிட வேண்டுமென்றால் இதர கிரேக்க மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு இறக்குமதியாகும் p-எழுத்துத் தொடக்கச் சொற்களிலிருந்தும் வெட்ட வேண்டும். அதனால் மேலும் குழப்பம். எ.கா: “Physiology”/ “Philosophy” / “Physics” சொற்களில் p ஒலிக்கப்படுகிறது & எழுத்தை வெட்டிவிட்டால் உச்சரிப்பே மாறிவிடும்.

p-எழுத்தை தவிர்த்து Sychology என உருவாக்கப்பட்டிருந்தால் சொல்லினை வேராய்வு செய்வோருக்கு குழப்பம் தான்: “sycho” என்ற மூலச்சொல்  கிரேக்க மொழியில் “soul” / “ஆன்மா” என்ற பொருளைத் தராது. குழப்பம் தான் ஏற்படும். வேரில் உள்ள எழுத்தை ஆங்கிலச் சொல்லில் சேர்த்துக் கொண்டு Psychology எனும் சொல்லை உருவாக்கி அதை ஒலிக்காமல் mute செய்து விட்டார்கள்.

Source : Google