
டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்வு
-திருகோணமலை நிருபர்-
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜாவா ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தினால் இன்று சனிக்கிழமை ‘வீட்டுக்கு வீடு’ டெங்கு விழிப்புணா்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு பரவும் இடங்களை பார்வையிட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு குடம்பிகள் பரவா வண்ணம் மக்களிடத்தில் இதன் போது விழிப்புணர்வூட்டப்பட்டது.
அதிகாித்துவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஜாவா ஜும்மா மஸ்ஜித் பள்ளி மஹல்லாவில் உள்ளடங்கும் பெரியாற்று முனை, பெரிய கிண்ணியா, எகுத்தார் நகர் போன்ற கிராம உத்தியோகத்தா் பிரிவுகளில் இன்றைய தினம் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிண்ணியா பொலிஸ் நிலைய பொலிஸார், கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிண்ணியா பிரதேச இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரின் பங்குபற்றுதலுடன் வீட்டுக்கு வீடு டெங்கு விழிப்புணா்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ் வீட்டுக்கு வீடு டெங்கு விழிப்புணா்வு நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.எம்.றிஸ்வி, அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் மற்றும் ஜாவா ஜும்மா மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.