றிசாட் பதியுதீனை பழிவாங்கிய ராஜபக்சக்களுக்கு மக்கள் நல்லதொரு பாடம் புகட்டுவர் – அப்துல்லா மஹ்ரூப்

 

-கிண்ணியா நிருபர்-

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணத்தை இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சிமன்றங்களிலும் போட்டியிடுவதற்காக மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப்

திருமலை மாவட்டத்தில் 13 சபைகளிலும் மக்கள் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது .கடந்த நான்கு வருட காலமாக பொதுஜனபெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளை சபைகளை ஆட்சி செய்தது எமது கட்சி ஆட்சி செய்யவில்லை இதன் மூலம் ஊழலற்ற சபை நடவடிக்கையால் பட்ஜட்கள் மூன்று இரண்டு தடவைகள் என தோற்கடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது

இது போல இம் முறை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிண்ணியா நகர பிரதேச சபைகள், மூதூர் குச்சவெளி தம்பலகாமம் ஆகிய ஐந்து சபைகளை மக்கள் காங்கிரஸ் ஆட்சி செய்யும் என்பதுடன் கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் பல சபைகளில் மயில் சின்னத்தில் போட்டியிடுகிறோம் மக்களின் வாக்களிப்பு மூலமாக பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றுவதுடன் றிசாட் பதியுதீனை பழிவாங்கிய ராஜபக்சக்களுக்கு இந்த தேர்தல் மூலம் மக்கள் நல்லதொரு பாடம் புகட்டுவர் என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.