கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஒளி விழா
-கல்முனை நிருபர்-
பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா நிகழ்வு வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
உலக மக்களை பாவங்களில் இருந்தும், சாபத்தில் இருந்தும் மீட்பதற்காக மனித அவதாரம் எடுத்து யேசுகிறிஸ்து இப் பூமியில் பிறந்தார். அவரது பிறப்பின் மகிமையை உணர்த்தும் வகையில் ஒளி விழா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
மனிதர்களின் வாழ்க்கையில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டுவருலதோடு மட்டுமல்ல சிறந்த மனிதர்களாக ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதை யேசுகிறிஸ்துவின் வருகை வலியுறுத்துகிறது.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் கிறிஸ்தவ பாட ஆசிரியை கொலின்ஸ் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஜெயந்திமாலா கலந்துகொண்டார்.
அத்துடன் அருட்தந்தை நிர்மல் சூசைராஜ், போதகர்களான ஞானதாஸ், ப.அருளாந்தம் நிரஞ்சன், காந்தன், கிரேஸ்கரன், பிரதி அதிபர்களான சண்முகநாதன், புவனேஸ்வரி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மாணவர்களினால் நத்தார் கீதம், யேசுகிஸ்துவின் பிறப்பு நாடகம், நடனம் ஆகிய பல்வேறு ஆற்றுகைகள் நடைபெற்றன.