
ரயில் – பாரவூர்தி மோதி விபத்து : ஒருவர் பலி
மீட்டியாகொட, கஹாவ, கொடகம ரயில் கடவையில் ரயிலுடன் பாரவூர்தி ஒன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பாரவூர்தியில் பயணித்த பத்தேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் விபத்தில் படுகாயமடைந்த பாரவூர்தியின் சாரதி பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
