
சுவிட்சர்லாந்திலிருந்து நாடு திரும்பிய இளம் குடும்பஸ்தர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்
வவுனியா – தோணிக்கல் பகுதியில் சுருக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் வீட்டிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் ( வயது 27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் சுவிட்சர்லாந்திலிருந்து விடுமுறையில் இலங்கைகு வருகை தந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
