பிறந்த நாளன்று நிகழ்ந்த சோகம் : இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த யுவதி!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் தனது பிறந்தநாளன்று இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (23 வயது) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் துவிச்சக்கர வண்டியில் குறித்த யுவதி சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த யுவதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்