மட்டக்களப்பில் வாகன நெரிசல்

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டது.

நேற்றையதினம் வியாழக்கிழமை பொசன் போயா தினத்தினை முன்னிட்டு மட்டக்கப்பு பொலிஸ் நிலையத்தின் முன்பாக தன்சல்கள் மற்றும் பொலிஸாரினால் சில நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதனால் குறித்த பகுதியில் மேடை அமைக்கப்பட்டிருந்ததுடன் அதிகளவான மக்கள் நிகழ்வினை பார்வையிட வந்திருந்தனர். இந் நிலையிலேயே குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் போக்குவரத்து பொலிஸார் நிலமையினை சீர் செய்தனர்.

இதேவேளை குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்