மட்டக்களப்பு ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச சபை முன்பாக, வர்த்தகர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.
வியாபாரம் செய்வதற்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், தாம் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்து, வர்த்தகர்களினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, தவிசாளரிடம் முறைப்பாடு தெரிவித்தும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள், ஆரையம்பதி பொதுச்சந்தையிலிருந்து மண்முனை பற்று பிரதேச சபை வரை சென்று, பிரதேச சபைக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மண்முனை பற்று பிரதேச செயலாளரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்னர் அவரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் எந்தவித சாதகமான பதிலையும் தெரிவிக்கவில்லை என்றும், நாளை பாரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
