இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி,  318 ரூபா 73 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 73 சதமாக காணப்பட்டது.

அத்துடன்,  இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 80 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 77 சதமாக காணப்பட்டது