
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 246.11 ரூபாவாகவும், கொள்வனவு விலை 234.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.84 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை பெறுமதி 406.23 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
