இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்று வியாழக்கிழமை நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.57 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 413.50 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 396.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
