இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  320 ரூபாய் 32 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை   அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 64 சதமாக காணப்பட்டது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 50 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 330 ரூபாய் 41 சதமாக காணப்பட்டது.