
இன்று முதல் மாணவர்களின் சீருடை துணி விநியோகம்
2023ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில், இலங்கைக்கான சீனா தூதுவரும் பங்கேற்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு தேவையான பாடசாலை சீருடை துணியில் 70 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.